உங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே போதும் உங்களை குளிர்விக்க

0
1006

சருமத்தில் இருக்கும் வெம்மையை நீக்கி, குளுமையை வழங்கும் தன்மையை உடைய பட்டையை அமெரிக்க பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை வீடு, அலுவலகம் மற்றும் பயணத்தின்போது என அனைத்து இடங்களிலும் உடலில் பொருத்திக்கொள்ளலாம்.

“சுற்றுச்சூழலின் வெப்பநிலைக்கு ஏற்ப இந்தப் பட்டையானது மாறிக்கொள்ளும். இது மென்மையாகவும் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சருமத்தின் வெப்பநிலை அதிகரித்தால் குளிர்விக்கவும், அதிகமான குளிர்ச்சியின்போது சருமத்தைச் சூடாக்கும் வகையிலும் இதை உருவாக்கியிருக்கிறோம்” என்கின்றனர் சான்டியாகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

நெகிழும் தன்மை கொண்ட இந்தப் பட்டை பேட்டரி மூலம் இயங்குகிறது. இதை ஆடைகள், ஆபரணங்களில் பொருத்திக்கொள்ளலாம்.  “அலுவலகத்தில் அதிக குளிரோ, வெப்பமோ நிலவும்போது இந்தப் பட்டையை அணிந்தால், சருமத்தின் வெப்பநிலையைச் சீரான முறையில் தக்கவைத்துக்கொள்ள உதவும். அதன் மூலம் ஏசி அல்லது ஹீட்டருக்குச் செலவாகும் அதிக மின்சாரத்தையும் சேமிக்க முடியும்” என்கிறார் ஆராய்ச்சியை வழிநடத்திய இயந்திர மற்றும் விண்வெளி பொறியியல் பேராசிரியர் ரான்கன் சென்.

இந்தக் கருவியானது விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here