பட்ஜெட் விலையில் Honor 9A, Honor 9S அறிமுகம்!

0
35

இந்தியாவில் ஹானர் 9A மற்றும் ஹானர் 9S ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை 6,499 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

இந்தியாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹானர் தரப்பில் இருந்து இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. பட்ஜெட் விலையில், நல்ல பிராண்டட் ஸ்மார்ட்போன்களிலேயே குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹானர் 9S ஸ்மார்ட்போன் 6,499 ரூபாய் என்றும், ஹானர் 9A ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஹானர் 9A சிறப்பம்சங்கள்:
ஹானர் 9A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10, மேஜிக் UI 3.1 தளத்தில் இயங்குகிறது. இதில் 6.3 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டாகோர் மீடியா டெக் MT6762R Soc பிராசசர், 3ஜிபி ரேம, பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா, முன்பக்கத்தில் 8 மெகா பிக்சலுடன் செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன.

64ஜிபி இன்பில்டு மெமரியும், 512 ஜிபி வரையில் மெமரி கார்டு விரிவுபடுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளன. இது 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். பின்புறத்தில் விரல் ரேகை சென்சார், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், FM ரேடியோ, 3.5mm ஹெட்போன் ஜேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹானர் 9S சிறப்பம்சங்கள்:
ஹானர் 9S ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10, மேஜிக் UI 3.1 தளத்தில் இயங்குகிறது. இதில் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆக்டாகோர் மீடியா டெக் MT6762R SoC பிராசசர், 2ஜிபி ரேம் வேரியன்டுடன் வருகிறது. பின்புறத்திலும், முன்புறத்திலும் ஒரே ஒரு கேமரா மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் உள்ள கேமரா 8 மெகா பிக்சலுடனும், முன்புறத்தில் உள்ள செல்ஃபி கேமரா 5 மெகா பிக்சலுடனும் வருகிறது.

32ஜிபி இன்பில்டு மெமரியும், 512 ஜிபி வரையில் மெமரி கார்டு விரிவுபடுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளன. இது 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 3,020mAh சக்தி கொண்ட பேட்டரி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5mm ஹெட்போன் ஜேக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறைபாடுகள்:
ஹானர் 9A மற்றும் ஹானர் 9S இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கூகுளின் எந்தவிதமான ஆப்களும் கிடையாது. அதாவது கூகுள் க்ரோம், யூடியூப், ஜிமெயில் போன்ற எந்த ஆப்ஸ்களும் கிடையாது, டவுன்லோடு செய்யவும் முடியாது.

அதற்குப் பதிலாக ஹானரின் பிரத்யேகமாக ‘மீடியா கேலரி’ என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோருக்குப் பதிலாக இந்த மீடியா கேலரியில் இருந்துதான் உங்களுக்குத் தேவையான ஆப்களை டவுன்லோடு செய்ய முடியும். மற்றபடி ஜிமெயில் போன்றவற்றை ஹானர் பிரவுசர் மூலமாக மட்டுமே பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here