பாச்டேஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போனாக அறிமுகம்?-Mi 10 Pro Plus

0
44

இந்த ஆண்டின் ஃபாஸ்டெஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போனாக Mi 10 Pro Plus அறிமுகமாகலாம் என்று செய்திகள் வந்துள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாவ்மி நிறுவனம் அன் டு டு பெஞ்ச்மார்கஸ் தளத்தில் அபரிமிதமான மதிப்பெண்களைப் பெற்றது. அதாவது M20007J1SC என்ற மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 687,422 பெஞ்ச்மார்க்கிங் ஸ்கோர்களைப் பெற்றது. இதனிடையே இந்த வார தொடக்கத்தில், ஷாவ்மி நிறுவனத்தின் சிஇஓ லீ ஜன், ஷாவ்மியின் அடுத்த ஸ்மார்ட்போனைப் பற்றி டீஸ் செய்தார்.

இவையணைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, ஷாவ்மி நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனாக Mi 10 Pro Plus ஸ்மார்ட்போனை களமிறக்க உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் இணையதளம் குறிப்பிடுகையில், இந்த ஆண்டின் அதிவேகமாக சார்ஜ் ஏறும் ஸ்மார்ட்போனாக எம்ஐ 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எம்ஐ 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் வயர் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் இருக்கலாம். அன்டுடு பெஞ்ச்மார்க் ஸ்கோரில் ஷாவ்மியின் புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் மதிப்பெண்கள் முழுவதுமாக வெளிவந்துள்ளது.

Mi 10 Pro Plus விவரக்குறிப்பு:

எம்ஐ 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் 4,500 mAh பேட்டரி, 30x ஜூம் கேமரா, இன்டிஸ்பிளே விரல் ரேகை சென்சார், ஸ்டீயோ ஸ்பீக்கர், இன்பில்டு கூலிங் டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here