மளிகைப் பொருட்கள் விநியோகத்தை தொடங்கியது ஸ்விக்கி!

0
113

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, ஸ்விக்கி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

Swiggy, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்திய ‘Swiggy Go’ உடனடி பிக்கப் மற்றும் டிராப் சேவையை, ‘Swiggy Genie’ என்று மறுபெயரிட்டுள்ளது.

இது எப்படி செயல்படுகிறது?

அந்த செயலியின் மூலம் மளிகை விநியோகத்தை இயக்க, ஸ்விக்கி ஒரு பிரத்யேக மளிகைப் பிரிவைக் கொண்டுள்ளது. அங்கு வாடிக்கையாளர்கள் ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விரும்பும் எந்தவொரு கடையிலிருந்தும் அத்தியாவசிய பொருட்களை ஆர்டர் செய்ய அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி மளிகை பிரிவு இந்தியா முழுவதும் பல நகரங்களில் நேரலையில் உள்ளது

ஆர்டர் செய்யும் பொருட்கள், இரண்டு மணி நேரத்தில் வழங்கும் என்று ஸ்விக்கி கூறுகிறது. மேலும், புதிய பிரிவு அருகிலுள்ள பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்களை சில இடங்களில் பட்டியலிடுகிறது. ஆரம்பத்தில், பெங்களூரு, சண்டிகர் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் Swiggy Genie செயல்படுகிறது.

ஸ்விக்கி செயலின் மூலம், அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வழங்க Swiggy Genie உதவுகிறது

ஸ்விக்கு, விஷால் மெகா மார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனும், மரிகோ போன்ற வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிராண்டுகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த சேவை, பிக்கப் மற்றும் டிராப் புள்ளிகளுக்கு இடையிலான மொத்த தூரத்தின் அடிப்படையில் கட்டணங்களைப் பயன்படுத்துகிறது. மேலும், பயனரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடை மூடப்பட்டிருந்தால் / ஆர்டர் எடுப்பதை அனுமதிக்காவிட்டால் பொருந்தக்கூடிய ரத்து கட்டணமும் இதில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here