பொதுமக்களுக்கு இலவச முட்டை விநியோகம்

0
57

நாமக்கல்:

நாமக்கல்லில் கொரோனோ வைரஸ் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளைப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் உள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சீல் வைக்கப்பட்ட பகுதியில் தீவிர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கு 100 ரூபாய்க்கான காய்கறிகள் பைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காய்கறிகளுடன் சேர்த்து 6 முட்டைகள் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா கூறியதாவது:-

நாமக்கல்லில் உள்ள 39 வார்டுகளில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப காய்கறிகள் பைகளில் போட்டு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறோம்.

இந்த நிலையில் பணம் கொடுத்து காய்கறி வாங்குபவர்களுக்கு இன்று முதல் 6 முட்டைகள் இலவசமாக வழங்க தொடங்கி உள்ளோம். இதனை தொடர்ந்து கோழி கறிகள் இலவசமாக வழங்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here