ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை- பிரதமர் மோடி

0
46

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 15 நாட்கள் ஆகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவிலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். பாராளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கும் அதிகமாக உள்ள கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here