உலகம் முழுக்க 82,000 பேரை பலி வாங்கிய கொரோனா!!

0
96

சர்வதேச நீதிமன்றம் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதை வரும் மே மாத் ஐறிதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்த கால இடைவெளியில், எந்த விதமான விசாரணைகளோ அல்லது நீதிமன்ற செயல்பாடுகளோ நடைபெறாது. 

மேலும், இது தொடர்பான நடைமுறைகளுக்கான அமல்படுத்தும் விதிகள் மற்றும் வழிமுறைகளைத் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச நீதிமன்றத்தின் பதிவாளர் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயம், இது வெறும் தகவலுக்கான அறிக்கை மட்டுமே ஒழிய அதிகாரப்பூர்வ ஆவணம் கிடையாது என்றும் தெரிவிக்க்ப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான நடவடிக்கையாக உலகில் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

நேற்றைய தினம் துணைக் குடியரசுத் தலைவர் பேசிய பேச்சு, நடைபெற்று முடிந்த அவசர அமைச்சரவைக் கூட்டம், இதுகுறித்து வெளியான அரசு வட்டாரத் தகவல்கள், தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நீட்டிப்பு உள்ளிட்டவை மேலும் மேலும் மக்களின் சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாகவே இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here