குடைமிளகாய் பனீர் பிரை

0
30

தேவையானவை

பனீர்    – 200 கிராம்
குடைமிளகாய் – 100 கிராம்
வெண்ணெய் – 50 கிராம்
பல்லாரி- 2
புதினா விழுது – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
பாதாம் – 100 கிராம்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்
தேவையான அளவு

 

செய்முறை :

பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைக்கவும். பனீரை சதுரமாக நறுக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் வெண்ணெய் உருகியதும் பல்லாரி, குடைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, தனியாத்தூள் சேர்க்கவும். பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறி, வெந்த பனீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையை சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த குடைமிளகாய் பனீர் பிரை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here