ஜிஎஸ்டி உயர்வால் இந்தியாவில் நோக்கியா போன்களின் விலை உயர்வு!

0
42

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிலையில், ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் தங்கள் போன்களின் விலையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே, ரியல்மி, ஷாவ்மி, ஆப்பிள் மற்றும் ஓப்போ போன்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இந்தியாவில் தங்கள் விலையை திருத்தியுள்ளன. அந்த வரிசையில் தற்போது நோக்கியாவும் அதன் போன்களின் விலையை உயர்த்தியுள்ளது.

போன்களின் விவரங்கள்:

நோக்கியா 2.3, நோக்கியா 110, நோக்கியா 6.2, நோக்கியா 7.2, நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2, நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 9 ப்யூர் வியூ ஆகியவை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

போன்களின் விலை:

இந்தியாவில், Nokia 2.3-யின் விலை இப்போது ரூ.7,585 ஆகும்.
ரூ.1,599-க்கு அறிமுகமான நோக்கியா 110 இப்போது ரூ.1,684 ஆகும்.
நோக்கியா 6.2-ன் விலை ரூ.12,499-யில் இருந்து விலை உயர்த்தப்பட்டு இப்போது ரூ.13,168-யாக உள்ளது.
இதேபோல், நோக்கியா 7.2-ன் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,330-யாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நோக்கியா 105 விலை ரூ.1,053, நோக்கியா 2.2 விலை ரூ.6,320-க்கும், நோக்கியா 4.2 விலை ரூ.10,008-க்கும் மற்றும் நோக்கியா 3.2 விலை ரூ.8,428-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் ரூ.49,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட, Nokia 9 PureView, ரூ.2,678 விலை உயர்ந்து இப்போது ரூ.52,677-யாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here