மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்துள்ள டாடா ஸ்கை!

0
137

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமான அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நாட்களின் போது வாடிக்கையாளர்களுக்கு உதவுமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களைக் கேட்டுக்கொண்டது.

அதனொரு பகுதியாக , டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை நிறுவனம், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் போது தனது சிறப்பு சலுகை ஒன்றை கொண்டு வந்துள்ளது.

டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது. டாடா ஸ்கை தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

டாடா ஸ்கை கடன் வசதியை பெறுவது எப்படி?

லாக்டவுன் நேரத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக, இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை, தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாதவர்களுக்கும், டீலர்களிடம் சென்று ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தினை கொண்டவர்களுக்கும் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த இலவச சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் தத்தம் சேவைகளை மீண்டும் ஆக்டிவேட் செய்தபின்னர் வரவு வைக்கப்பட்ட தொகையானது கழிக்கப்படும். இந்த சேவையைப் பெற, பயனர்கள் வெறுமனே 080-61999922 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும், அவ்வளவுதான்!

இது தவிரத்து, டான்ஸ் ஸ்டுடியோ, பியூட்டி, ஃபிட்னெஸ், ஸ்மார்ட் மேனேஜர், வேதிக் மேத்ஸ், டாடா ஸ்கை ஃபன் லேர்ன் மற்றும் பல போன்ற பத்து இன்டராக்டிவ் சேனல்களின் சேவைகளையும் டாடா ஸ்கை நிறுவனம் வழங்குகிறது.

இந்த செக்ஷன்களை நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸ் அல்லது அதன் மொபைல் ஆப் வழியாக அணுகலாம். நிறுவனம் இந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு லாக்டவுன் நாட்களில் ஆதரவு அளிக்கும் நோக்கத்தின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி டாடா ஸ்கை நிறுவனம் தனது உடற்பயிற்சி சேனலுக்கான இலவச அணுகலை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here