புரொக்கோலி கிரீன் ரைஸ்

0
30

தேவையான பொருட்கள்

புரொக்கோலி –  100 கிராம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
ஃப்ரெஷ் பட்டாணி  –  2 மேஜைக் கரண்டி
பச்சை குடைமிளகாய் -2 மேஜைக் கரண்டி (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
வடித்த சாதம் – 200 கிராம்
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
புதினா  – 2
தண்ணீர் – 1\4 கப்
இஞ்சி , பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
முந்திரி – 3
பாதாம் – 3
பெரிய வெங்காயம் -1/2
உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை

கடாயில் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய  பெரிய வெங்காயம், சீரகம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய புரொக்கோலி, -பச்சை குடைமிளகாய், பட்டாணியைச் சேர்த்து  வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, புதினாவைச் சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீரைச் சேர்த்து பட்டாணி, புரொக்கோலியை வேக விடவும். கலவை நன்கு வதங்கியவுடன் வடித்த சாதத்துடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here