அதிர்ச்சியளித்த நெல்லை..! ஒரு மண்டலத்தையே வளைத்துள்ள காவல் துறை…

0
25

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முதல்முறையாக ஒரு மண்டலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றான மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டது. மேலப்பாளையம் ஊர் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்ததால் மேலப்பாளையத்திலிருந்து வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் யாரும் வெளியே வரவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 45 பேர் இதில் அடங்குவர். அதில் 22 பேர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்து பேரிடியை கொடுத்துள்ளது. தற்போது வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வரும் தமிழக அரசுக்கு இந்த சூழல் மேலும் சவாலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here