வாட்ஸ்அப்பில் அறிமுகமான “பூதக்கண்ணாடி” அம்சம்!

0
51

வாட்ஸ்அப்பில் ஒரு புத்யம் அம்சம் அறிமுகம் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடி வடிவிலான பட்டனை காட்சிப்படுத்தும் இந்த புதிய அம்சத்தின் பயன் என்ன?

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், ஒரு புதிய அம்சத்தினை சோதிக்க தொடங்கியுள்ளது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் வழியாக உங்களுக்கு கிடைக்கும் பார்வேட் மெசேஜ்களின் (forward message) உண்மைத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கிறது.

அதெப்படி?

இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்அப் வழியாக பலமுறை அனுப்பப்பட்ட, ஒரு குறிப்பிட்ட பார்வேட் மெசேஜிற்கு அருகில் பூதக்கண்ணாடி வடிவிலான ஒரு பட்டனை காட்சிப்படுத்தும். அதன் வழியாக குறிப்பிட்ட பார்வேட் மெசேஜின் உண்மைத்தன்மையை நீங்கள் சரிபார்க்கலாம், பின்னர் அதை பார்வேட் செய்யலாமா அல்லது முடிவை நீங்கள் எடுக்கலாம்.

யாருக்கெல்லாம் அணுக கிடைக்கிறது?

தற்போது வரையிலாக வாட்ஸ்அப்பின் பீட்டா சேனலின் வழியாக இந்த அம்சத்தை மெதுவாக உருட்டப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் பயனர், குறிப்பிட்ட பூதக்கண்ணாடி பொத்தானைத் தட்டியதும், வாட்ஸ்அப் ஒரு பாப்-அப்பை காண்பிக்கும், அது “இதை வெப் வழியாக தேட விரும்புகிறீர்களா?” என்று கேட்கும். இந்த இடத்தில் நீங்கள் “Cancel” செய்யலாம் அல்லது “Search Web” பட்டனை கிளிக் செய்யலாம்.

தீயாய் பரவும் போலி மெசேஜ்கள்!

போலியான மற்றும் தவறான தகவல்களுக்கு ஆளாகக்கூடிய இந்திய பயனர்களுக்கு இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

குறிப்பிற்காக கொரோனா வைரஸ் எங்கெல்லாம் பரவி உள்ளது? அதை குணப்படுத்துவது எப்படி? மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான போலி செய்திகள் வெள்ளமாக பரவி வரும் இந்நேரத்தில், இதை ரோல்-அவுட் செய்வது ஒரு நல்ல அறிகுறியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here