அட குட்டி ஆல்யா வந்தாச்சா!!

0
51

துனுக்குகள்

  • எப்போதுமே வெள்ளித்திரையை விட சின்னத்திரைக்கு மவுசு அதிகம்
  • அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வேற லெவல்
  • அவர்களது ரசிகர்களுக்கு அழகான ஒரு குட்டி அப்டேட்

எப்போதுமே வெள்ளித்திரையை விட சின்னதிரைக்கு மவுசு அதிகம், காரணம் சின்னதிரை தினமும் மக்களோடு மக்களாகக் கலந்துவிடுகிறது. அதே போல வெள்ளித்திரை நட்சத்திரங்களைப் போலவே சின்னதிரை நட்சத்திரங்களுக்கும் மக்களால் பெரிய அளவில் நேசிக்கப்படுகின்றனர். அதிலும் சின்னதிரையில் இருந்து பெரிய திரைக்கும் வரும் நடிகர் நடிகைகள் என்றால் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு வேற லெவல்.

கடந்த சில ஆண்டுகளாக சின்னதிரையில் கலக்கி வரும் ஜோடிகள் தான் ஆலியா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ். இருவரும் சின்னதிரை நாடகங்களில் ஒன்றாக நடிக்கத் தொடங்கி அதன் பிறகு காதல் திருமணம் செய்துகொண்டனர். நாடகங்களிலும் சரி நிஜ வாழ்விலும் சரி ஒரு மிகச்சிறந்த ஜோடியாக அவர்கள் திகழ்ந்து வருகின்றனர் என்று அவர்களது ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சிறப்பாகத் திருமண வாழ்வைக் கழித்து வந்து இருவரும் தற்போது அவர்களது ரசிகர்களுக்கு அழகான ஒரு குட்டி அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளனர். மானசா தற்போது ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் மானசாவின் கணவர் சஞ்சீவ் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here