கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

0
58
நடிகர்கள்: துல்கர் சல்மான்,ரித்து வர்மா,ரக்ஷன்
இயக்கம்: தேசிங் பெரியசாமி
ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி அதில் சில தில்லாலங்கடி வேலை செய்து பணம் சம்பாதிப்பவர் சித்தார்த்(துல்கர் சல்மான்). அவரின் ரூம்மேட் மற்றும் நண்பர் காளிஸ்(ரக்ஷன்). சித்தார்த்துக்கு பியூட்டிஷியனான மீரா(ரித்து வர்மா) மீது காதல் ஏற்பட்டு ப்ரொபோஸ் செய்கிறார். மீராவும் சித்தார்த்தின் காதலை ஏற்கிறார். இந்நிலையில் காளிஸுக்கு மீராவின் தோழி ஸ்ரேயா(நிரஞ்சனி அகத்தியன்) மீது காதல் வருகிறது.

திருட்டுத்தனம் செய்து சம்பாதித்தது போதும் கோவாவுக்கு சென்று காதலிகளுடன் செட்டில் ஆகிவிடலாம் என்று சித்தார்த் மற்றும் காளிஸ் முடிவு செய்கிறார்கள். இதற்கிடையே சித்தார்த், காளிஸின் திருட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி பிரதாப் சக்ரவர்த்தி(கவுதம் மேனன்) அவர்களை பிடிக்க தீர்மானிக்கிறார்.

கோவாவுக்கு சென்ற பிறகு தான் சித்தார்த் மற்றும் காளிஸுக்கு தாங்கள் காதலிக்கும் பெண்களின் உண்மையான முகம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை.

ரொமான்டிக் த்ரில்லர் படம் புதிது இல்லை என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் தேசிங் பெரியசாமி கைதட்டல் பெறுகிறார். சரியான அளவில் காதல், த்ரில், நகைச்சுவை ஆகியவற்றை கொடுத்துள்ளார் இயக்குநர்.

படத்திற்கு இசை பக்கபலம். படம் சுவாரஸ்யமாக இருப்பதால் அதன் நீளம் பெரிதாக தெரியவில்லை. துல்கர் சல்மானும், ரித்து வர்மாவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கவுதம் மேனன் நடிப்பில் அசத்திவிட்டார். அவர் படங்களை இயக்குவதோடு மட்டும் இல்லாமல் அடிக்கடி நடிகர் அவதாரமும் எடுத்தால் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here