இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மும்பை நகரமானது ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை பெற்ற மாநிலமாக திகழ்கிறது. அதிலும் நவி மும்பை மற்றும் தானே பகுதியில் உள்ள மக்கள் தொகை விண்ணையே தொடும் அளவிற்கு உயர்ந்துவருகிறது
சௌபதி கடற்கரை:(Beach)
சௌபதி கடற்கரை மும்பையில் புகழ்பெற்ற சுற்றுலாப் பயணிகள் இடங்களில் ஒன்றாகும். இது மும்பையின் இதயமாக கருதப்படும் சௌபதி கடற்கரை உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் சென்று வரும் இடமாக கருதப்படுகின்றன.
அதிலும் இந்த கடற்கரையில் மிகச்சிறந்த ருசியான சாட் ஐயிட்டமான பேல் பூரி, பானிபூரி உள்ளிட்ட பல சாட் உணவகங்களும், பலூன்கடைகளும் இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது,
சர்ச்கேட் ஸ்டேடியம் இரயில் நிலையம் மிக அருகில் உள்ள இரயில்வே நிலையமாகும்.
கேட்வே ஆஃப் இந்தியா, மும்பை
மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டிடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா. இந்தக் கட்டிடம் ஹிந்து மற்றும் முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டுள்ளது. மும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம். மேலும், கொலாபா காஸ்வே, பேட் மியாஸ் மற்றும் புகழ்பெற்ற கஃபே லியோபோல்ட் போன்ற மும்பையின் மற்ற அடையாளங்களும் கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில்தான் இருக்கின்றன.
எஸ்ஸெல் வோர்ல்:
எஸ்ஸெல் வோர்ல்ட் ஒரு மிகச்சிறந்த அம்யூஸ்மெண்ட் பார்க்கில் ஒன்றாக இருக்கும் இது மும்பை பகுதியில் உள்ள கவாரி பகுதியில் உள்ளது. குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதளவில் கவரும் வகையில் உள்ள தீம் பார்க்காக இருக்கும்.
சித்தி விநாயகர் கோவில்:
மும்பையில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாக இருக்கும் சித்தி விநாயக கோவிலில் விநாயகர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மும்பை ஃபிலிம் சிட்டி:
இந்த திரைப்பட நகரம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. மும்பையில் உள்ள கோரிகேன் பகுதியில் அமைந்துள்ளது. இதில் ரெக்கார்டிங் ரூம், தோட்டங்கள், ஏரிகள், தியேட்டர்கள் என சினிமாவுக்கு தேவையான செட் பொருட்கள் எல்லாம் அங்கு இருக்கும்.
கடற்கரையை நேசிக்கும் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் மும்பையின் ஜூஹு பீச்சாகும். இந்தக் கடற்கரை பாந்த்ராவிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ளது. இங்கு கிடைக்கும் பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச் போன்ற அனைத்து கடற்கரை உணவுகளையும் நீங்கள் போதும் போதும் என்ற அளவுக்கு சுவைத்து மகிழலாம். அதோடு ஐஸ் பாப்ஸிகல்ஸ் அல்லது கோலாஸ் எனும் உணவு வகை பயணிகளிடையே வெகு பிரபலம். மேலும், இந்தக் கடற்கரையின் சூரிய அஸ்த்தமனக் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.