நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் – வருமான வரித்துறை சம்மன்

0
23

 

  • பிகில் படத்தின் வசூல் குறித்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
  • அன்புச்செழியன் வீட்டிலிருந்து ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பரிமுதல்
  • விஜய்யின் வீட்டிலும் 2 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.

பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து கைப்பற்றப்படடுள்ள ஆவணங்கள் குறித்து விசாரிக்க, நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டுமென வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிகில் படத்தின் வசூல் குறித்து கடந்த புதன் அன்று நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியனர் ஜி.என். அன்புச்செழியன் ஆகியோரின், வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடந்தினர். அதில், நடிகர் விஜய் மற்றும் ஏஜிஎஸ் குழுமத்திடமிருந்து எந்தவித ஆவணமும், ரொக்கமும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல் வெளியானது

ஆனால், பைனாசியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து ரூ. 77 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டது.

ஐடி ரெய்டு முடிந்ததும், அடுத்த நாளே நடிகர் விஜய் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்தார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் என்.எல்.சியில் குவிந்து, ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அதையடுத்து, அங்கு குவிந்த தன் ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துகொண்டார் விஜய். அந்த விடியோக்கள் இணையத்தில் பறவியது.

இந்நிலையில், பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்து விசாரிக்க, நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் பைனான்சியனர் அன்புச்செழியன் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் சார்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளது. அதில், அடுந்த 3 நாட்களுக்குள் மூவரும் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here