ஆஸ்கர் 2020: 6 விருதுகளைத் தட்டிச் சென்ற ‘Parasite’-விருது வென்றவர்கள் முழு விவர

0
67

ஆஸ்கர் 2020 விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்’ உட்பட 6 விருதுகளைப் பெற்றுள்ளது ‘பாரசைட்’ திரைப்படம்.

முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத ஒரு படம் ஆஸ்கர் விருதை வென்றது.

92-வது அகாடமி விருதுகளில் ‘பாரசைட்’ திரைப்படம் முதல் பரிசைப் பெற்றுள்ளது. ‘1917′ மற்றும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் ஹாலிவுட்’ ஆகிய சிறப்பான திரைப்படங்களுடன் கடுமையாக போட்டியிட்டு இந்த விருதைப் பெற்றுள்ளது ‘பாராசைட்’.

மேலும் இப்படம், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை உள்ளிட்ட விருதுகளையும் வென்றது. இதுதான் தென் கொரியாவின் முதல் பரிந்துரைக்கப்பட்ட படமாம். மொத்தமாக இப்படம் 6 விருதுகளைப் பெற்றுள்ளது.

கொரிய மொழி திரைப்படமான இத, ஏழை மற்றும் வேலையற்ற கிம் என்பவரது குடும்பத்தைப் பற்றியது. தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் கொண்ட ஒரு குடும்பம், பார்க் என்பவரின் குடும்பத்தில் திட்டம் வகுத்து வேலைக்குச் சேர்கின்றனர். சந்தர்ப சூழ்நிலையால் ஒரு கட்டத்தில், பார்க்கிடம் சிக்கிக்கொள்கின்றனர். இதற்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் படத்தை ரசிக்கும் படியாக அமைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ‘பாராசைட்’ உலகளவில் 165 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – பாராசைட்

சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ரூடி)

சிறந்த ஆவணப்படம் – அமெரிக்கன் பேக்டரி

சிறந்த வெளிநாட்டு படம் – பாராசைட் (கொரியன்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி-4

சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஹேர் லவ்

சிறந்த ஆவண குறும்படம் – லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி நெய்பர்ஸ் விண்டோ

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டீக்கின்ஸ் (1917)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

சிறந்த திரைக்கதை – போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை – டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)

சிறந்த பின்னணி இசை – ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)

சிறந்த பாடல் – லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த ஒப்பனை – கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)

ஆடை வடிவமைப்பு – ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)

தயாரிப்பு வடிவமைப்பு – பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

ஒலி கோர்ப்பு – மார்க் டெய்லர் (1917)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here