அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணி…

0
29

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை இளம் இந்திய அணி 172 ரன்களுக்கு சுருட்டியது.

தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்படோருக்கான 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கிறது. மொத்தமாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஏ பிரிவில் ஜப்பான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுது.

இதன் முதல் காலிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

சுஷாந்த் மிரட்டல்
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகம து (4) சொதப்பலான துவக்கம் அளித்தார். தொடர்ந்து வந்த பஹத் (0) ஏமாற்றினார். துவக்க வீரர் ஹைதர் அலி (56) அரைசதம் அடித்து அவுட்டானார். தொடர்ந்து வந்த குவாசிம் அக்ரம் (9) நிலைக்கவில்லை.

நிலைக்கவில்லை
பின் வந்த கேப்டன் ரோஹாயில் நசிர் அணியை சரிவில் இருந்து மீட்டார். சீரான இடைவேளையில் பவுண்டரிகள் விளாசிய நசிர், 62 ரன்கள் எடுத்த போது சுசாந்த் வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த இர்பான் கான் (3), அபாஸ் அப்ரிடி (2), தாஹிர் கூசைன் (2) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 172 ரன்களுக்கு சுருண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here