வெறும் ரூ.78 க்கு தினமும் 3GB…மிரட்டும் பிஎஸ்என்எல்!!

0
49
மூன்று மாதங்கள் முற்றிலும் இலவசம் என்று தனது வியாபாரத்தை ஆரம்பித்த முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, அதன் போட்டியாளரான பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா வரை அனைத்து இந்திய டெலிகாம் நிறுவனங்கள் வரை அனைத்துமே அதன் கட்டண திட்டங்களின் விலைகளை உயர்த்திவிட்டன, பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டை தவிர!

வேற மாதிரியான ஆட்டம் ஆகும் பிஎஸ்என்எல்!

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவைகள் தங்கள் கட்டணங்களை 40% வரை அதிகரித்தை நாம் கண்டோம், ஆனால் அந்த கூட்டத்துடன் பிஎஸ்என்எல் சேரவில்லை. அதாவது மற்ற ஆபரேட்டர்கள் தங்களது டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்களை அதிக விலைக்கு அனுப்ப, பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பழைய மற்றும் குறைந்த விலையிலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்று அர்த்தம். இந்த ஒரு காரணமே, பிஎஸ்என்எல்-ன் திட்டங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என்று பயனர்கள் கருத வைக்க போதுமானதாக இருக்கிறது, அதுவே பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சாதகமான சூழ்நிலையாகவும் இருக்கிறது.

3ஜிபி முதல் 5ஜிபி அளவிலான தினசரி டேட்டா!

இது தவிர்த்து பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அதன் பயனர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விடயமும் உள்ளது. மற்ற எல்லா தொலைதொடர்பு ஆபரேட்டர்களும் பெரும்பாலும் மாதத்திற்கு 2 ஜிபி, 3 ஜிபி அல்லது 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்க, மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனமோ சற்று கூடுதலான தினசரி டேட்டாவை அனுப்பும் திட்டங்களை தன்வசம் கொண்டுள்ளது. அப்படியாக தினமும் 3ஜிபி அல்லது 5ஜிபி வரையிலான டேட்டாவை வழங்கும் மற்றும் டேட்டா வரம்பே இல்லாத சில குறிப்பிடத்தக்க பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் இங்கே உள்ளன, அவைகளில் ஒன்றை நீங்களே தேர்வு செய்யலாம்.

5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் “கனரக டேட்டா” பயனர்களைப் பற்றி பேசும்போது நம் மனதில் தோன்றும் முதல் ப்ரீபெய்ட் திட்டம் PRBSTV 548 தான். நீங்கள் இதன் பெயரிலிருந்து யூகிக்கக்கூடியபடி, இந்த திட்டம் பி.எஸ்.என்.எல்-இன் ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர் (எஸ்.டி.வி) ஆகும், மேலும் இது ரூ.548 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த எஸ்.டி.வியின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தவரை இது ஒரு நாளைக்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, அந்த 5 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, 80 கே.பி.பி.எஸ் அளவிலான வேகத்தின் கீழ் வரம்பற்ற டேட்டா அணுக கிடைக்கும். இருப்பினும், இந்த ப்ரீபெய்ட் திட்டம் எந்த விதமான அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மையுடனும் வரவில்லை என்பதை சந்தாதாரர்கள் கவனிக்க வேண்டும்.

டேட்டா வரம்பு இல்லாத பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல்-ல் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்றொரு தனித்துவமான திட்டமும் உள்ளது, அது ரூ.1,098 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். பி.எஸ்.என்.எல்-ன் இந்த அதிக விலை ப்ரீபெய்ட் திட்டமானது, நீங்கள் யூகிக்கக்கூடியது நீண்ட கால செல்லுபடியை வழங்கும் ஒரு திட்டமாகும், இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில், பி.எஸ்.என்.எல் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியை 75 நாட்களாகக் குறைத்தது, ஆனால் இப்போது இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்களாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது எந்தவிதமான தினசரி டேட்டா வரம்புடனும் வரவில்லை. இருப்பினும், இந்த திட்டத்தின் முழு செல்லுபடியாகும் காலகட்டத்தில் உங்களால் மொத்தம் 375 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும். இது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்கள் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது

ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல்-ல் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமும் உள்ளது. அதன் விலை ரூ.78 ஆகும், இதுவொரு டேட்டா எஸ்டிவி ஆகும். ஆனால் மேலே குறிப்பிட்ட திட்டங்களுடன் ஒப்பிடும்போது, இந்த திட்டம் 8 நாட்கள் என்கிற மிகவும் குறைந்த வேலிடிட்டி காலத்தை கொண்டுள்ளது. இந்த செல்லுபடியாகும் காலகட்டத்தில், ரூ.78 டேட்டா எஸ்டிவி ஆனது பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த வரம்பு முடிந்த பிறகு, 40 கே.பி.பி.எஸ் என்கிற இணைய வேகம் அணுக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 250 இலவச நிமிடங்களையும் வழங்குகிறது. இதனுடன் சில கூடுதல் நன்மைகளும் உள்ளன, 250 நிமிடங்கள் குரல் அழைப்பைத் தவிர, ரூ .78 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் வீடியோ அழைப்பையும் வழங்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக, இந்த திட்டம் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவையையும் தொகுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here