ஆஸிக்கு எதிராக சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!!

0
81

ராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா மேலும் ஒரு மைல்கல் சாதனை படைத்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய 1-0 என முன்னிலையில் உள்ளது. இதன் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டியில் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
ரோஹித் மைல்கல் .
இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, 42 ரன்கள் அடித்து அவுட்டானார். இவர் மேலும் 4 ரன்கள் அடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியிருக்கலாம். ஆனால் இதை ரோஹித் ஷர்மா தவறவிட்டார். இருந்தாலும் இப்போட்டியில் 13 ரன்கள் அடித்த போது, ரோஹித் ஷர்மா துவக்க வீரராக 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

அதிவேகமாக
இப்போட்டிக்கு முன்பாக துவக்க வீரராக 6987 ரன்கள் அடித்திருந்த ரோஹித் இம்மைல்கல்லை அதிவேகமாக 7000 ரன்களை கடந்த துவக்க வீரர் என்ற பெருமை பெற்றார். மேலும் இம்மைல்கல்லை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய 11ஆவது வீரரானார் ரோஹித். தனது 137ஆவது இன்னிங்சில் ரோஹித் இம்மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் துவக்க வீரராக அதிவேகமாக 7000 ரன்களை எட்டிய தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லாவின் (147 இன்னிங்ஸ்) சாதனையை ரோஹித் முறியடித்தார்.

நான்காவது இந்தியர்
தவிர, இ ம்மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் ரோஹித். முன்னதாக ஜாம்பவான் சச்சின், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 7000 ரன்களை எட்டிய டாப்-5 வீரர்கள்
ரோஹித் ஷர்மா (இந்தியா) – 137 இன்னிங்ஸ்
ஆம்லா (தென் ஆப்ரிக்கா) – 147 இன்னிங்ஸ்
சச்சின் (இந்தியா) – 160 இன்னிங்ஸ்
தில்ஷன் (இலங்கை) – 165 இன்னிங்ஸ்
கங்குலி (இந்தியா) – 168 இன்னிங்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here