அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,மகுடம் சூட்டப்படும் வீரர் யார்?

0
118

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது 9 வது சுற்றை எட்டியுள்ள நிலையில் மேலும் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வரும் காளையை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவிரமாக களத்தில் போட்டியிட்டு வருகின்றனர்.

இதில் 700 காளைகளும் 921 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். போட்டி நிறைவடைந்த பின்னர் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார் பரிசளிக்கப்படவுள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் போட்டி ஒன்பதாவது சுற்றை எட்டியுள்ள நிலையில் 620 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டுள்ளதால் எஞ்சியுள்ள காளைகளுக்காக போட்டியின் நேரம் அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

களத்தில் கார்த்திக் என்பவர் 12 காளைகளை அடக்கி முதல் முன்னணியில் இருப்பதால் அவருக்கு முதல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அவரை தொடர்ந்து பிரவீன்குமார் மற்றும் ராம்குமார் இருவரும் இரண்டாவதாக அதிகபடச்ச காளைகளை அடக்கி அடுத்த நிலையில் உள்ளனர்.

குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கருப்பன், கொம்பன் கருப்பன் காளைகள் வீரர்களுக்கு பிடிபடாமல் சென்றது. விறுவிறுப்பாக நடந்த வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் முடியவுள்ளது.

இந்தப் போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் கண்டு ரசித்துவருகின்றனர். இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், பீரோ எனப் பலப் பரிசுகள் காத்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here