முகத்தை மூடி டிக்டாக்… மூச்சுத்திணறி சிறுவன் பலி..

0
76

கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சியை மையமாக வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த சிறுவர்களில் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செயலிகளின் உலகில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கும் டிக்டாக் பயனர்களின் கால்களை கட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். வீடியோக்களை பார்ப்பது மட்டும் பதிவிடுவது என்ற காரணங்களால் டிக்டாக் செயலியை பொழுதுபோக்காக பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஏற்படும் விபரீதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. கொல்கத்தாவின் மல்டா மாவட்டத்தில் உள்ள பிர்காஞ்ச் என்ற பகுதியில் நான்கு சிறுவர்கள் சேர்ந்து டிக்டாக் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அதற்கு ஒரு விபரீத டாஸ்கை கான்செப்டாக எடுக்க நினைத்த அவர்கள், அதற்கு கரீம் ஷெய்க் என்ற சிறுவனை பயன்படுத்திக்கொண்டனர்.

அந்த கான்செப்ட்டில் சிறுவன் ஒரு போஸ்ட் கம்பத்தில் கட்டப்படுவார். மேலும் அவரது முகம் கழுத்துவரை பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டிருக்கும். 10 நிமிடத்திற்குள் அந்த நபர் கை கட்டை அவிழ்த்துக்கொண்டு டாஸ்கை முடிக்க வேண்டும் என்பதுதான். இதன்படி கரீம் ஷெய்க்கை கம்பத்தில் கட்டப்பட்டு, முகத்தையும் பிளாஸ்டி பையால் மறைத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர்.

பின்னர் 10 நிமிஷம் முடிவதற்குள் அந்த சிறுவன் மயக்கமாகி கீழே விழுந்துள்ளான். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, கரீம் மூச்சு திணறி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மூன்று சிறுவர்கள் மீது புகார் அளித்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் அதுபோல நிறைய விபரீத காட்சிகளை தொடர்ச்சியாக வீடியோ எடுத்து டிக்டாக்கில் போடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த வீடியோவை எடுக்கவும் கரீம் ஷெய்க்கை அவர்கள் வம்படியாக அழைத்து சென்றதும் தெரிந்தது. அது மட்டுமின்றி இந்த விவகாரத்தில் சிறுவனின் தம்பியும் உடந்தை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here