தொடரும் ஈரான் மக்களின் போராட்டம்…

0
74

சமூக வலைதளங்களின் வாயிலாகவும் வீடியோக்கள் பரவியுள்ளது. இதனால் கோபமடைந்துள்ள மக்கள் 176 பேர் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அரசுக்கு எதிராகவும், அந்நாட்டு அதிபருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டபோது அமெரிக்க ராணுவத்தை விட மாட்டோம் என சூளுரைத்து வந்த மக்கள், ஈரான் ராணுவம் செய்த செயலை கண்டித்து இப்போது போராடத் தொடங்கியுள்ளனர்.

உலக நாட்டுத் தலைவர்களின் கவனம் முழுவதும் இப்போது, ஈரான் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் மீதே திரும்பியுள்ளது. தனது அரசு செய்த தவற்றுக்கு நியாயம் கேட்டு மக்கள் போராடுவது மனித நேயத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

போராட்டத்தின்போது ஆங்காங்கே, போராட்டக்காரர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக் காவலர்கள் தடியடி, கன்னி புகைக் குண்டுகளை வீசி வருகிறார்கள். இதைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் டிரம்ப், “ஈரான் நாட்டின் நிலவரம் குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகரிடம் ஆலோசனை நடத்தினேன். ஈரான் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் அரசை அதிரச் செய்துள்ளது. விரைவில் ஈரானில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். அது அவர்கள் கைகளில்தான் உள்ளது. ஆனால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் போராட்டக்காரர்களைக் கொல்லாமல் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here