அறிமுகமானது Amazon ஸ்மார்ட் டிவிகள்..

0
72

பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனத்திற்கு வெறுமனே ஸ்மார்ட் டிவிகளை விற்றுவிற்று ‘போர்’ அடித்து விட்டது போலும். ஆம்! ஒனிடா நிறுவனத்துடன் கைகோர்த்து அமேசான் நிறுவனம் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

அமேசான் நிறுவனம் பிரபல டிவி தயாரிப்பாளர் ஆன ஒனிடாவுடன் இணைந்து இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகளின் ஸ்க்ரீன் சைஸ் என்ன? மற்ற அம்சங்கள் என்னென்ன? இந்திய விலை நிர்ணயம் என்ன? இதை நம்பி வாங்கலாமா? வாருங்கள் அலசலாம்!

அமேசான் & ஒனிடா நிறுவனங்கள் ஆனது இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது: 32 இன்ச் எச்டி ஸ்மார்ட் டிவி மற்றும் 43 இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. இந்த ஸ்மார்ட் டிவிகளின் இந்திய விலை நிர்ணயம் ஆனது முறையே ரூ.12,999 மற்றும் ரூ.21,999 ஆகும். இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுமே அமேசான் தளம் வழியாக வருகிற டிசம்பர் 20, 2019 முதல் வாங்க கிடைக்கும்.


இதை நம்பி வாங்கலாமா?

இந்த சமீபத்திய ஒனிடா ஃபயர் டிவி எடிஷன் ஆனது பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது. பெயரிலேயே தெரிந்திருக்கும் இந்த ஸ்மார்ட் டிவிகள் ஆனது உள்ளமைக்கப்பட்ட ஃபயர் டிவியுடன் வருகிறது. அதாவது பயனர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃப்லிக்ஸ், யூடியூப், சோனி லிவ், ஜீ5, சன் என்எக்ஸ்டி மற்றும் பலவற்றைக் காணலாம்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட் டிவிகள் இரண்டு விருப்பங்களில் கிடைக்கின்றன, 32 அங்குல எச்டி மாடல் மற்றும் 43 அங்குல முழு எச்டி மாடல், இந்த இரண்டுமே 1200: 1 என்ற கான்ட்ராஸ்ட் விகிதம் மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸை ஆதரிக்கிறது. அதிவேக ஒலி அனுபவத்திற்காக டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட் சவுண்டையும் இது கொண்டுள்ளது.

அலெக்சா வாய்ஸ் ரிமோட் உடன் வருகிறது!

இந்த ஒனிடா ஃபயர் டிவி எடிஷன் டிவிகள் ஆனது அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் வருகிறது, இதன் மூலம், நீங்கள் அமேசான் அலெக்சாவிடம் பல்வேறு பணிகளை செய்ய சொல்லலாம், ஓடிடி கன்டென்ட்களை பிளே செய்ய சொல்லலாம், பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தேடலாம், இசையை பிளே செய்யலாம், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆயிரக்கணக்கான அலெக்சா திறன்களை அணுகலாம்.

இணைப்பு ஆதரவுகள்!

ஒனிடா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் ஆனது க்வாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த ஓனிடா ஃபயர் டிவி எடிஷனில் உள்ளமைக்கப்பட்ட வைஃபை, 3 எச்.டி.எம்.ஐ போர்ட்கள், 1 யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 1 இயர்போன் போர்ட் ஆகியவைகளும் உள்ளது. இவைகள் டி.டி.எச் அல்லது கேபிள் செட் டாப் பாக்ஸ், கேமிங் கன்சோல்கள், சவுண்ட் பார்கள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டங்களை தடையின்றி இணைக்க உதவும் என்பதில் வேண்டாம்.

நம்பி வாங்கலாம்!

மொத்தத்தில் ரூ.15,000 க்குள் மற்றும் ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் நியாமமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் டிவிகளாகவே ஒனிடா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் பார்க்கப்படுகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here