ஆக்ஷன் சினிமா விமர்சனம்

0
89
நடிகர்கள்: விஷால்,தமன்னா,யோகிபாபு
இயக்கம்: சுந்தர் சி

எத்தனை நாள் தான் நானும் மசாலா படமாக எடுப்பது என்று சுந்தர் சி. சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கிய படம் தான் ஆக்ஷன்.

தமிழக முதல்வரின்(பழ கருப்பையா) மகன் ராணுவ அதிகாரி சுபாஷ்(விஷால்). அவர் ஒரு தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக உள்ளவரை தேடி செல்கிறார். இஸ்தான்புல், லண்டன், லாகூர் என்று பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளனர். அதில் தவறு எதுவும் இல்லை. எடுத்த எடுப்பிலேயே இஸ்தான்புல்லில் ஆக்ஷன் காட்சியுடன் துவங்குகிறது படம்.

படம் துவங்கியதுமே விஷாலுக்கு படுபயங்கரமாக பில்ட்அப் கொடுக்கிறார்கள். அவன் வந்தா ஆப்ஷன் இல்லை ஆக்ஷன் தான், உண்மையை தேடி ஆறாயிரம் கிலோமீட்டர் வந்தவன் உன்னை தேடி அரை கிலோமீட்டர் வர மாட்டானா என்று பன்ச் வசனம் வைத்துள்ளனர். (ஹீரோ என்றால் இப்படி ஓவர் பில்ட்அப் கொடுப்பது எல்லாம் கண்டிப்பாக தேவையா?)

தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஆளை தேடிச் செல்லும்போது விஷால் பல சவால்களை சந்திக்கிறார். அவருக்கு சக ராணுவ அதிகாரியான தியா(தமன்னா) உதவி செய்கிறார். தியாவுக்கு சுபாஷ் மீது காதல், சுபாஷுக்கு ஐஸ்வர்யா லக்ஷ்மி மீது காதல். ஆனால் ஐஸ்வர்யா லக்ஷ்மி கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். விஷாலின் அண்ணனாக நடித்துள்ள ராம்கியும் இறந்துவிடுகிறார்.

பழைய ஸ்டைல் வசனங்கள் படத்திற்கு கை கொடுக்கவில்லை. படம் முழுக்க இருக்க வேண்டிய பரபரப்பை பாடல்கள் வந்து கெடுக்கின்றன. யோகி பாபுவின் காமெடி ஓகே. ஆனால் அதுவும் வேகத்திற்கு தடை போடுவதாக உள்ளது. எடிட்டிங்கில் ரொம்பவே சொதப்பிவிட்டார்கள். ஆக்ஷன் காட்சிகள் படம் முழுக்க அருமை என்று கூறிவிட முடியாது. பரபரன்னும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளன, பார்த்து பார்த்து புளித்துப் போன காட்சிகளும் உள்ளன.

ப்ப்பா பில்ட்அப்பே இப்படி என்றால் வில்லன் எப்படி டெரராக இருப்பார் என்று நினைத்தால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. வில்லன் பார்க்க மட்டுமே ஜிம் பாடி ஆனால் ரொம்ப வீக். வில்லனை அதுவும் அவரின் கோட்டையான பாகிஸ்தானில் நம்ம ஹீரோ அசால்டா ஜெயிக்கிறார்.

பழைய ஸ்டைல் வசனங்களை உன்னிப்பாக கவனித்து அர்த்தம் புரிந்தால் ஆக்ஷன் டெரர் படம் இல்லை என்றால் ரொம்ப கஷ்டம். ஆக ஆக்ஷன் சுமார் ரகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here