வாழை இலை மசாலா மீன்

0
117

தேவையான பொருட்கள்

சீலா மீன் அல்லது வாவல் மீன் – 1/2 கிலோ
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 மே.கரண்டி
மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் மீனுடன் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

மசாலா:

எண்ணெய் தேவைக்கு
பல்லாரி வெங்காயம் -4 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 3 பொடியாக நறுக்கவும்
பச்ச மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்தூள் – கார தேவைக்கு
மல்லி தூள் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 6 பல்
இஞ்சி – சின்ன துண்டு
உப்பு – தேவைக்கு

செய்முறை:

தவாவில் 2 மே.கரண்டி எண்ணெய் விட்டு மீனை லேசாக வறுத்து எடுக்கவும்.

பிறகு அதே தவாவில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பச்ச மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் , மல்லி தூள் , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து திக்கான கிரேவி பதம் வருவது போல் குறைந்த தணலில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.

 

வாழை இலையினை சிறுது தீயில் மேலாக காட்டி சிறு துண்டாக நறுக்கி அதில் எண்ணெய் தடவி வைக்கவும். அதன் மேல் வத்கக்கி வைத்த கிரேவி சிறுது வைத்து அதன் மேலே மீன் வைத்து அதன் மேல் சிறுது கிரேவி வைத்து வாழை இலையை மடித்து வைக்கவும்.
தவாவில் சிறுது எண்ணெய் விட்டு மடித்த வாழை இலையினை வைத்து மிகவும் குறைந்த தணலில் வேக வைக்கவும். குறைந்த தணலில் வைப்பதால் கிரேவி மீனுடன் மசாலா கலந்து மிகவும் சுவையாக இருக்கும்.

வாழை இலை பொன்னிறமாகியதும் மீன் தயாராகி விட்டது. வாழை இலை மணத்துடன் மீன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here