புதிய போக்குவரத்து சட்டம் : குறைந்துள்ளது கோவையில் Drunk & Drive

0
276

கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கும் நடைமுறையின் மூலம் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மாநகரில் 20 உயிர் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் வாகன ஓட்டிகள் விதிமீறும்போது வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பும். இந்த விதி மீறலுக்காக இவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது என்று தானாகவே செய்யும். இதுதவிர கட்டுப்பாட்டு அறை, இ-ஐ செயலி மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. போலீசார் வீடு தேடி சென்று அபராதம் வசூல் செய்யும் முறையில் நடைமுறை சிக்கல் மற்றும் கால விரயம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு வாகன விதி மீறல் குறித்து மத்திய அரசின் இணைய தளமான ‘பரிவாகன்’ பக்கத்தில் பதி வேற்றம் செய்யப்படுகிறது. அதே நேரம் குறிப்பிட்ட வாகன உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் அபராத தொகையை ஆன்-லைன் மூலம் செலுத்தலாம். அபராதம் செலுத்த கால அவகாசம் கிடையாது. ஆனால் வாகனங்களுக்கு எப்.சி., இன்சூரன்ஸ் புதுப்பிக்க செல்லும்போது இன்சூரன்ஸ் தொகையுடன் அபராத தொகையும் சேர்ந்து வசூலிக்கப்படும். இன்சூரன்ஸ் இல்லை என்றால் விற்பனை செய்யும்போது அபராத தொகை செலுத்திய பின்னரே விற்பனை செய்ய முடியும். கடந்த 10 நாட்களாக இந்த ‘பரிவாகன்’ செயல்பட்டு வருகிறது. இதுவரை 35 ஆயிரம் பேர் விதிமீறியதாக பதிவேற்றம் செய்யப்பட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் தீவிரமாக கண்காணித்து அபராதம் வசூல் செய்யப்படும்.

புதிய போக்குவரத்து வாகன சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும் என்பதை அறிந்ததால் குடிபோதையில் வாகன ஓட்டுபவர் வெகுவாக குறைந்து விட்டனர். அபராதம் குறைந்த அளவே வசூல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது குறைந்ததால் விபத்து மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here