சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கவுள்ளது: சபரிமலைக்கு பெண்கள் அனுமதி குறித்து

0
31

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யும் படி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சுப்ரீம் கோர்ட் இம்மாதம் தீர்ப்பு வழங்க உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த ஆண்டு செப்.,28 அன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரிய 65 மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் இந்த ஆண்டு பிப்.,6 ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதால் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது சரியாகாது. 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதில்லை என்ற கலாச்சார நடைமுறையில் கோர்ட் தலையிட வேண்டாம் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி அலுவலகத்தையும் ஆர்டிஐ.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பும், ரபேல் விவகாரத்தில் மத்திய அரசிற்கு தொடர்பில்லை என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற உள்ளதால் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளில், வரும் 10 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இந்த தீர்ப்பு வெளியானால் அது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும். பல கோடி மக்களின் உணர்வு தொடர்பான வழக்காக இது கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here