ஏன் இந்த முடிவு? காரணத்தை சொல்லும் கவின்?

0
77

ஏன் கவின் இப்படி செய்தார், என்ன இப்படி பண்ணிட்டாரு ஆகிய கேள்விகளுக்கு எல்லாம் கவின்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கமல் ஹாசன் கூறுவது போன்று முதல் புரோமோ வீடியோ அமைந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து 3 ஆவது சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சி வரும் 6 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் நடிகர் கவினும் ஒருவர். நட்பு, காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த கவின் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் கொடுத்த ஆஃபரான ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு இந்நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறினார்.

ஏன், அவ்வாறு செய்தார்? இன்னும் ஒரு வாரம் அவர் இருந்திருக்கலாமே? கவின் இப்படி செய்ததற்கு என்ன காரணம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்குரிய காரணத்தை இன்று கவின் அனைவரிடமும் தெரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்று அமையும் விதமாகவே இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கூறுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டைலாக நடந்து வரும் கமல், ஏன் கவின் இப்படி செஞ்சாரு, என்ன இப்படி பண்ணிட்டாரு இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் கவின்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவரே சொல்வதற்கு முன்னால் நம்மால் கொஞ்சம் யூகிக்க முடிகிறது. அதாவது, அண்மையில், கவினின் தாயார் ராஜலட்சுமி உள்பட அவரது குடும்பத்தினர் 3 பேர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காப்பாற்றவே, கவின் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் லோஸ்லியா, வெளியில் சென்ற கவின் ஜாலியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். உண்மையில், கவின் வெளியேறியதற்கான காரணம் தெரிந்தால், அவரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தற்போதைய கேள்வி. ஏனென்றால், நட்பையும் மீறி கவின் – லோஸ்லியா இருவருக்கும் இடையில் நல்லவொரு புரிந்துணர்வு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here