உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி!

0
201

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் சுவையான ஓட்ஸ் கட்லெட் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

ஹைலைட்ஸ்

  • ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும்
  • ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை ஓட்ஸ் குறைப்பதால், மாரடைப்பு வரும் வாய்ப்பும் குறையும்
ஓட்ஸில் நார், இரும்பு, கலோரீஸ், புரதம், கொலஸ்ட்ரால், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2 உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. ஓட்ஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்தும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை ஓட்ஸ் குறைப்பதால், மாரடைப்பு வரும் வாய்ப்பும் குறையும். காய்கறிகள், பழங்களில் காணப்படுகிற ‘பைட்டோ கெமிக்கல்’ (Phyoto Chemical) ஓட்ஸிலும் இருப்பதால் ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது.
தேவையானவை:
ஓட்ஸ் – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி,
துருவிய கேரட்,
நறுக்கிய குடமிளகாய் – தலா அரை கப்,
வெங்காயம்,
உருளைக்கிழங்கு (சிறியது) – தலா ஒன்று,
பிரவுன் பிரெட் ஸ்லைஸ் – 2,
தனியாத்துள், சீரகத்தூள்,
மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • ஓட்ஸ், பிரெட் டை மிக்ஸியில் இட்டு தனித்தனியாக பொடி செய்யவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து மூடி வைத்து பிறகு வதக்கவும்.
  • காய்கள் வெந்ததும் நன்றாக மசித்து, அதனுடன் பிரெட் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும்.
  • பின்னர் ஓட்ஸ் பொடியில் நன்றாக இரண்டு பக்கமும் புரட்டி, உருண்டைகளாக்கி, தட்டவும்.
  • பின்னர் தவாவில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் கட்லெட் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here