பலேனோ ஆர்.எஸ். காருக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுஸுகி..!

0
61

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ ஆர்.எஸ். மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரை அதிரடி தள்ளுப்படியை அறிவித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனையாகும் ப்ரீமியம் ரக ஹேட்ச்பேக் கார்களில் முன்னணியில் உள்ள மாடல் மாருதி சுஸுகி பலேனோ. இந்த காரின் அதிக செயல்திறன் கொண்ட மாடல் பலேனோ ஆர்.எஸ். என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பட்ஜெட் விலையில், சிறப்பான செயல்திறனை எதிர்நோக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் நல்ல தேர்வாக இருந்து வருகிறது. 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார், 101 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்து,

காரின் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. தொடர்ந்து நல்ல விற்பனை திறனை பதிவு செய்து வரும் இந்த பலேனோ ஆர்.எஸ் காருக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் காரை வாங்க எதிர்பார்த்து வந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த அச்சர்யம் அடைந்துள்ளனர். தள்ளுபடி அறிவிக்கப்பட்டதன் காரணம் குறித்து தரவுகளை நாங்கள் ஆராய்ந்தோம்.

மற்ற நிறுவனங்கள் போல தள்ளுபடியை வாரி வழங்கும் நிறுவனமாக மாருதி சுஸுகி எப்போதும் இருந்தது இல்லை. ஒருவேளை மாருதியின் ஏதேனும் கார்கள் தோய்வான விற்பனையை பெறும் பட்சத்தில் அந்நிறுவனம் அந்த மாடலுக்கு தள்ளுபடியை அறிவிக்கும்.

பலேனோ ஆர்.எஸ் மாடலுக்கான விற்பனை திறன் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இதற்கு ரூ. 1 லட்சம் வரை மாருதி சுஸுகி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் குழப்பம் அடைந்துள்ளது.

எனினும், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு பலேனோ ஆர்.எஸ். காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேம்படுத்தப்படாது என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் குடோன் மற்றும் ஷோரூம்களில் இருப்பில் உள்ள பலேனோ ஆர்.எஸ் மாடல்களை விற்பனை செய்ய மாருதி திட்டமிட்டு வருகிறது.

இன்னும் சில நாட்களில் பண்டிகை கால விற்பனை தொடங்கவுள்ளது. அதை பயன்படுத்தி இந்த கார்களை விற்பனை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதனாலேயே பலேனோ ஆர்.எஸ். காருக்கு ரூ. 1 லட்சம் வரை மாருதி சுஸுகி தள்ளுபடி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள மாருதி டீலர்களை தொடர்பு கொண்டு விலை குறைப்பு நடவடிக்கையை பற்றி உறுதி செய்து கொள்ளலாம் எனவும் இங்கு அறிவுறுத்தப்படுகிறது.

சராசரி பலேனோ காரை விட, பலேனோ ஆர்.எஸ். மாடல் அதிக செயல்திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இதனுடைய வெளிப்புற கட்டமைப்பில் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் காருக்கு வசீகரத் தோற்றம் கிடைக்கிறது. அசத்தலான தொழில்நுட்ப கட்டமைப்பை பெற்றுள்ள இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் நிறைவான கட்டமைப்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here