டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அதிரடி மாற்றம்..

0
113

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் அதிரடியான சில மாற்றங்களை செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதுப்பித்துள்ளது

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில், மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக திறனறிவு கேள்விகள் அதிக அளவு இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரையில், இதில் முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று மொழிப்பாடத்தில் இருந்தும், மீதமுள்ள 100 கேள்விகள் பொதுஅறிவு பாடத்திட்டமாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்பட்டு பாடத்திட்டங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி, 175 கேள்விகள் பொதுஅறிவுக் கேள்விகளாகவும், மீதமுள்ள 25 கேள்விகள் திறனறிவுக் கேள்விகளாகவும் பாடத்திட்டம் உள்ளது.

பொதுஅறிவு பகுதி பட்டப்படிப்பு அளவில் உள்ளது. திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு பகுதியானது பத்தாம் வகுப்பு தரத்திலும் உள்ளது. இரண்டு தாள்களும் சேர்த்து மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300 என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 90 என்றும் உள்ளது.

இதுவரையில் மொழிப்பாடம் தனிப்பகுதியாக இருந்து வந்தது. தற்போது மொழிப்பாடம் பொதுஅறிவு, திறனறிவு பகுதிக்குள் உட்புகுதத்ப்பட்டுள்ளது. இதனால், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய பாடத்திட்டம் குறித்த முழுமையான விபரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகார்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here