செல்போனை சார்ஜ் போட்டு பயன்படுத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

0
55

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(27). இவர் நேற்று தனது வீட்டில் செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டு, பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(27). இவர் நேற்று தனது வீட்டில் செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டு, பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் தேவேந்திரன் (27), தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் தேவேந்திரன், தனது வீட்டில் செல்போனை சார்ஜர் போட்டுக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தேவேந்திரன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தேவேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்!

செல்போன் சார்ஜில் இருக்கும்போது வரும் அழைப்புகளை பேசுவதால், உங்கள் அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதன்மூலம் பேட்டரின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்று, திடீரென்று வெடித்து சிதறும். எனவே சார்ஜ் போட்டு பேசுவதை தவிருங்கள்.

செல்போனில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, வரும் அழைப்புகளை உடனே அட்டென் செய்வதால், வெப்பநிலை தூண்டப்பட்டு செல்போன் வெடிக்கும். எனவே இண்டர்நெட் பயன்படுத்தும் போது அழைப்புகள் வந்தால், சிறிது நேரம் கழித்து பேசவும்.

விலை குறைவாகக் கிடைக்கிறது என்று மலிவு விலை சார்ஜரை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் ஃபோனின் பேட்டரியை பதம் பார்த்துவிடும். ஒரிஜினல் ப்ராண்ட் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள்.

தரமான கம்பெனி பவர் பேங்கை பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் அந்த பவர் பேங்க் அதிக மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்திவிடலாம்.

இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள் ஒரு மணி நேரம் அல்லது சார்ஜ் நூறு சதவிகிதகம் வரும்வரையில் போட்டுக் கொள்ளுங்கள். மேலும் தினம் ஒருமுறை உங்கள் போனை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள்; மாதம் ஒரு முறை ரீசெட் செய்யுங்கள்!

இவ்வாறு பயன்படுத்துவதால், பேட்டரி வெடிப்பதிலிருந்து செல்போனை பாதுகாக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here