உலகளவில் 5 -வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த டாடா மோட்டார்ஸ்(TATA Motors)

0
159

உலகளவில் தரமான வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 5ம் இடம் கிடைத்துள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் வர்த்தக மற்றும் வணிக ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு இந்தாண்டு வாகனது துறைக்கான வர்த்தகம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதில், உலகளவில் தரமான வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 5ம் இடம் கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் டாடா மோட்டார்ஸுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.

வணிகம் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் உலகின் முன்னணி ஊடக நிறுவனமாக இருப்பது ஃபோர்ப்ஸ். ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் நிலவும் வர்த்தக, வணிக ஏற்ற இறக்கங்களை பட்டியலிட்டு வெளியிடுவது ஃபோர்ப்ஸின் வழக்கம்

அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. உலகளவில் உள்ள வாகன நிறுவனங்கள், அதனுடைய தயாரிப்பு வடிவங்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் மனோபாவம் உள்ளிட்ட தரவுகளை ஆராய்ந்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, உலகளவில் தரமான வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸுக்கு 5ம் இடம் கிடைத்துள்ளது. டாடா நிறுவனத்திற்கு சர்வதேசளவில் கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த அங்கீகாரம் டாடா மோட்டார்ஸுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. இதன்மூலம் வாகனத்துறையில் இந்தியாவின் தயாரிப்புகளுக்கு கௌரவம் அதிகரிக்கும். மேலும், இந்த அங்கீகாரம் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் தரம் வாய்ந்தவையாக அடையாளம் காணப்படும்.

முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் மிகவும் பாதுகாப்பு நிறைந்த வாகனம் என்கிற 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இதன்மூலம் பாதுகாப்பு நிறைந்த வாகனங்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது என்கிற அடையாளத்தை டாடா ஏற்படுத்தியது.

தற்போது தரமான வாகனங்கள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன என்ற அடையாளத்தை புதியதாக பதித்துள்ளது டாடா. இதற்காக பல்வேறு தரப்பினர் டாடா நிறுவனத்திற்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உலகளவில் வாகனங்களை ஓட்டுமொத்தமாக தயாரிக்கும் நிறுவனங்களுக்கான பட்டியலில் டாடாவுக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. இதே தகுதிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த இரண்டாயிரம் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி டாடா இந்த சாதனையை பெற்றுள்ளது.

கடந்த வருடம் இதே பிரிவில் டாடா மோட்டார்ஸ் 70வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அடுத்தாண்டு அந்நிறுவனம் காட்டிய தீவிரமான செயல்பாடுகள் மூலம் தற்போது 31வது இடம் டாடாவுக்கு கிடைத்துள்ளது.

வாகன உற்பத்தி வர்த்தக மற்றும் வணிகம் தொடர்பாக மொத்தம் 50 நாடுகளில் ஃபோர்ஸ் பத்திரிக்கை கள ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த சர்வேவுக்காக மொத்தம் 15 ஆயிரம் பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்தனர். தரவுகளை சேகரித்து ஆவணப்படுத்தினர்.

டாடா நிறுவனத்தின் வணிக வர்த்தக செயல்பாடுகள் மட்டுமின்றி, அது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையையும் கணக்கில் கொள்ளப்பட்டது. அப்போது கிடைக்கப்பெற்ற முடிவுகளை வைத்து, இந்த அங்கீகாரத்தை டாடா மோட்டார்ஸ் தன் வசமாக்கியுள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை மூலம் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் குறித்து பேசிய டாடா மோட்டார்ஸ் இயக்குநர் குவேந்தர் பத்ஷோக், வாகன தயாரிப்பில் உலகளவில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக டாடாவை அங்கிகரித்த ஃபோர்ப்ஸுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா மோட்டார்ஸ், டாடா கன்செல்டென்ஸ்ஸீ சர்வீஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கான தர மதிப்பீட்டு ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. டாடாவை போன்றும் மொத்த 16 இந்திய நிறுவங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here