பிரெட் அல்வா

0
12

என்னென்ன தேவை?

பிரெட் ஸ்லைஸ் – 6,
எண்ணெய், தேங்காய்ப்பால் – தலா 1 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்.பாதாம்,முந்திரி

 

எப்படிச் செய்வது?

  • பிரெட் ஸ்லைஸ்களை நான்கு துண்டுகளாக நறுக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து கொள்ள வும்.
  • நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பொரித்த பிரெட் துண்டுகளை போட்டு கைவிடாமல் கிளறவும்.
  • அனைத்தும் சேர்ந்து அல்வா பதத்திற்கு சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி பாதாம்,முந்திரி சேர்த்து இறக்கவும்.
  • சுவையான பிரெட் அல்வா ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here