காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த ஏ.டி.எம் கொள்ளை முயற்சி!!

0
153

காஞ்சிபுரம் அருகே ஸ்டேட் பாங்க் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள், காவல் துறையினரை கண்டதும் தப்பியோடியுள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் வேளிங்கை பட்டறை என்ற இடத்தில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் ஏடிஎம் சென்டருக்குள் நுழைந்த மூன்று வாலிபர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் சிசிடிவியில் பதிய கூடாது என்பதற்காக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே மூலம் கருப்பு சாயத்தையும் அடித்து பக்காவான திட்டத்துடன் முயற்சியை தொடங்கியுள்ளனர். இவர்களின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகித்த அப்பகுதியில் இருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் தெரிய வந்ததும் ஓரிக்கை பகுதியில் ரோந்தில் இருந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினரின் வருகை கண்ட மூன்று வாலிபர்களும் அவர்களுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். சற்று தூரம் அவர்களை பின்தொடர்ந்த காவலர்கள் வாலிபர்களை பிடிக்க முடியாமல் திரும்பினர்.

இதனையடுத்து சம்பவத்தை அறிந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் காவல் ஆய்வாளர் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஏடிஎம்மில் மர்ம ஆசாமிகள் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here