ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி!

0
87

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான தொடர், இன்று முதல் வரும் அக்டோபர் 16 வரை நடக்கிறது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில், தமிழ்நாடு அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.

ராஜஸ்தான் ‘பேட்டிங்’…
இதில் ‘டாஸ்’ வென்ற தமிழ்நாடு அணி முதலில், ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு குப்தா (77), ராகுல் சகார் (48) ஆகியோர் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்தது. தமிழக அணி சார்பில் விக்னேஷ் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

தினேஷ் கார்த்திக் அரைசதம்…
எட்டக்கூடிய இலக்கை துரத்திய தமிழக அணிக்கு துவக்க வீரர் ஜெகதீசன் (7) ஏமாற்றினார். மற்றொரு வீரர் அபினவ் முகுந்த் (75) அரைசதம் அடித்து வெளியேறினார். பின் வந்த ஹரி நிசாந்த் (20) ஏமாற்றினார்.

அப்ராஜித் (52) அரைசதம் கடந்து அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் (52*) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இதையடுத்து தமிழ்நாடு அணி 48 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here