குடை மிளகாய் பிரியாணி

0
8

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
இஞ்சி, பூண்டு பேஸ்ட்-  1/2 டேபிள் ஸ்பூன்,
கொத்தமல்லி,
புதினா – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
பிரியாணி மசாலா – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மட்டன் மசாலா – 1/2 டீஸ்பூன்,
பட்டை – 2,
கிராம்பு – 2,
பிரியாணி இலை – 1,
ஏலக்காய் – 1,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

 

செய்முறை

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  • பின் பிரியாணி மசாலா, மிளகுத்தூள், மட்டன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • குடை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் வதக்கியபின், மசாலாவுடன் சேர்க்கவும்.
  • பின் எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியைப் போட்டு 20 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.
  • சுவையான குடைமிளகாய் பிரியாணி தயார்.
  • இதனுடன் குருமா மற்றும் கெச்சப் சேர்த்து பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here