எந்த ஹீரோவுக்கும் சகோதரியாக நடிப்பேன்!!!

0
1302

சிவகார்த்திகேயனுக்கு மட்டும் அல்ல எந்த ஹீரோவுக்கும் சகோதரியாக நடிப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல திறமை இருந்தும் இன்னும் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்து மட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.

அந்தஸ்து என்ன பெரிய அந்தஸ்து என்று தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயினாக வலம் வரும் ஐஸ்வர்யா சிவகார்த்திகேயனின் இது நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார்.

என்ன இந்த பொண்ணு, இப்படி தங்கச்சியாக நடித்துள்ளார். தங்கச்சியாக நடித்தால் இனி யார் இவரை ஹீரோயினாக பார்ப்பார்கள் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. அது காத்து வாக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் காதில் விழ அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று நான் ஒருபோதும் கூறியது இல்லை. தங்கையாக நடித்தால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போகுமோ என்ற எண்ணம் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் கதை பிடித்துப் போனதால் தங்கையாக நடித்தேன். சிவாவுக்கு மட்டும் அல்ல எந்த ஹீரோவுக்கும் தங்கையாக நடிப்பேன் என்று ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஹய்யோ ஐஸு, தங்கச்சியாக நடிக்கத்தயார் என்று இப்படி ஓபனா சொல்லாதீங்க. அதன் பிறகு இயக்குநர்கள் உங்களை தங்கச்சிப் பாப்பாவாக மட்டுமே பார்ப்பார்கள் என்று ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஹீரோயின் என்ன எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் என்னால் பெயர் வாங்க முடியும் என்கிற ஐஸ்வர்யா ராஜேஷின் நம்பிக்கை பாராட்டுக்குரியது.

இதற்கிடையே ஐஸ்வர்யா ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியேறினார். டேட்ஸ் பிரச்சனையால் அவரால் கமல் படத்தில் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here