இனி ‘தல’யை வெளியவே பார்க்க முடியாது

0
52

அஜித்தை படங்களில் பார்ப்பதோடு சரி. மற்ற இடங்களில் அவரை பார்ப்பது கடினம். அண்மை காலமாக தான் அஜித்தை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து ரசிகர்கள் செல்ஃபி எடுக்கிறார்கள்.

இல்லை என்றால் அவர் தனது குடும்பத்துடன் எங்காவது வெளியே சென்றால் விமான நிலையத்திலோ அல்லது ஹோட்டலிலோ ரசிகர்கள் பார்க்கிறார்கள். அஜித் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ரசிகர்களை அவரை சுற்றி வளைத்துவிடுகிறார்கள்.

ரசிகர்களின் மனதையும் புண்புடுத்தக் கூடாது, பட வேலைகளும் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதால் அவர் தன் பட ஷூட்டிங்குகளை வெளி மாநிலங்களில் வைக்கச் சொல்கிறார். பெரும்பாலும் ஹைதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் தான் அஜித் பட ஷூட்டிங் நடைபெறுகிறது.

அஜித் டப்பிங் பேச மட்டுமே தியேட்டருக்கு சென்றார். அதுவும் ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்க இரவில் தான் டப்பிங் தியேட்டருக்கு செல்வார். தற்போது அதற்கும் ஒரு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார். அதாவது தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டரை அமைத்துள்ளாராம் அஜித்.

இனி அவர் வீட்டில் உள்ள தியேட்டரில் தான் டப்பிங் பேசுவாராம். ஏற்கனவே ரஜினிகாந்த் தனது வீட்டில் டப்பிங் தியேட்டர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீக பாதையில் ரஜினியை பின்பற்றும் அஜித் டப்பிங் விஷயத்திலும் சூப்பர் ஸ்டார் வழியே தல வழி என்று செல்கிறார் போன்று.

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தான் நடிக்கும் தல 60 படத்திற்கு அஜித் தன் வீட்டில் உள்ள தியேட்டரில் தான் டப்பிங் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல 60 படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக அதுவும் பெப்பர் லுக்கில் நடிக்கிறார். அஜித்தை மீண்டும் காக்கிச் சட்டையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here