ஜெயிக்கப்போவது காதலா? நட்பா? இப்போதே வாக்களியுங்கள்!

0
53

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில், இந்த வாரம் கவின், லோஸ்லியா, சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகிய 5 போட்டியாளர்கள் வெளியேற்றத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் பொழுது போக்கு நிகழ்ச்சி எது என்றால் அது பிக் பாஸ் என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சியின் மூலம் இந்த சேனலுக்கு டிஆர்பி எகிறிக்கொண்டே இருக்கிறது. இரவு 9.30 மணி ஆகிவிட்டாலே போதும் குடும்ப பெண்கள் முதல், பெரியவர்கள், குழந்தைகள் வரை எல்லோரும் வீட்டில் டிவி முன்னாடி தான் இருப்பார்கள். அப்படியும் இல்லை என்றால் மொபைல் போன்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் முதலாக விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகம் செய்தது. தற்போது 3ஆவது சீசனை எட்டியுள்ளது. இன்னும் எத்தனை சீசன் செல்லுமோ என்று சொல்லவும் முடியாது. அந்தளவிற்கு இந்நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்லாவே வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

துவக்கத்தில் கலைகட்டிய பிக் பாஸ் வீடு, கொஞ்ச வாரத்திலேயே ரணகளமாக மாறியது. முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீரா மிதுன் பணமோசடி, வனிதாவின் குழந்தை கடத்தல் விவகாரம், மதுமிதாவின் தற்கொலை முயற்சி என்று பிக் பாஸ் நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

க் பாஸ் வீட்டில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் நீடிக்கணுமா அல்லது வெளியேறனுமா என்பதை எல்லாம் மக்கள் தான் முடிவு செய்வார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? ஆம், அவர்களுக்கு தான் வாக்களிக்கும் உரிமை இருக்கிறதே. ஆன்லைன் வாக்கு மற்றும் மிஸ்டு கால் முறை என்று இருவிதமாக வாக்களிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் போதும், இந்த போட்டியாளர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று தெரிவிக்கப்படும். அப்படியில்லை என்றால், ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம். ஆம், ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு காலை முதல் இரவு வரை வாக்களிக்கும் பட்டன் இருக்கும். அப்போது வாக்களிக்கலாம். எத்தனை வாக்குகள் வேண்டுமென்றாலும் செலுத்தலாம். ஒரு போட்டியாளர்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றால் அவர் பாதுகாகாக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். குறைவான வாக்குகள் பெற்ற போட்டியாளர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வாக்கு

  • இதற்கு கூகுள் அக்கவுண்ட் அல்லது பேஸ்புக் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.
  • புரௌசர் ஓபன் செய்து அதில், ஏதாவது கூகுள் அக்கவுண்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும்.
  • அதன் பிறகு கூகுள் பக்கத்தில் பிக் பாஸ் தமிழ் என்று டைப் செய்து அதனை எண்டர் செய்து கொள்ள வேண்டும்.
  • அதில், வரும் வாரத்திற்காக எவிக்‌ஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்கள் பெயர் இடம்பெற்றிருக்கும்.
  • அதில், உங்களுக்கு பிடித்த போட்டியாளர் ஒருவருக்கு வாக்களிக்கலாம் அல்லது இரண்டாக பிரித்து மற்றொரு போட்டியாளருக்கும் அளிக்கலாம்.
  • அதிகபட்சமாக 10 வாக்குகள் ஒருவர் செலுத்தலாம்.
  • நீங்கள் அளிக்கும் வாக்குகள் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகு எத்தனை வாக்குகள் பதிவாகியிருக்கிறது என்று எண்ணப்படும்.
  • இதில், யார் குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் கமல் ஹாசன் மூலமாக வார இறுதியில் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டு கால் முறை

ஆன்லைன் முறையைத் தொடர்ந்து மற்றொரு முறை என்றால் அது மிஸ்டு கால் தான். ஒருவருக்கு நெட் வசதி இருக்குமோ? இருக்காதோ? அல்லது அவருக்கு நெட் குறித்து தெரியுமோ? தெரியாதோ? அதற்காகவே மிகவும் எளிமையான முறை என்றால் அது மிஸ்டு கால் தான். இதற்கு எந்த கூகுள் அக்கவுண்ட்டும் தேவையில்லை.

அந்த வகையில் கவின், ஷெரின், லோஸ்லியா, சாண்டி, தர்ஷன் ஆகிய 5 போட்டியாளர்கள் 14ஆவது வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போட்டியில் நீடிக்க வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்….

ஒருவர்ஒரு எண்ணிலிருந்து 10 முறை மிஸ்டு கால் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வ.எண் போட்டியாளர் மிஸ்டு கால் நம்பர்
1 கவின் 836 77 96 804
2 ஷெரின் 83 677 96 813
3 தர்ஷன் 83 677 96 814
4 லோஸ்லியா 83 677 96 805
5 சாண்டி 83 677 96 811

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here