குழந்தைகள் விரும்பிஉண்ணும் பேரீச்சம் பழம் கேக்…

0
58

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு:125 கிராம்,
சர்க்கரை:125 கிராம் (பொடித்தது),
முட்டை:1 (பெரியது),
உப்பு:1 சிட்டிகை,
வெண்ணெய்:75 கிராம் (உருக்கி ஆற வைத்தது),
வெனிலா எசென்ஸ்:1 டீஸ்பூன்,
பால்:100 மில்லி,
பேக்கிங் பவுடர்:1 டீஸ்பூன்,
பேரீச்சம் பழம்:50 கிராம் (நறுக்கியது),
வால் நட்ஸ்:25 கிராம் (பொடியாக நறுக்கியது).

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், வால் நட்ஸ், பேரீச்சம் பழம் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
  • பின் மற்றொரு பாத்திரத்தில் முட்டையை அடித்து சர்க்கரை, பால், எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.
  • பின் அதில் உருக்கிய வெண்ணையை சேர்த்து கலக்கவும்.
  • பின் மேல் உள்ள கலவையில் கோதுமை மாவு கலவையை சேர்த்து கிளறி அதை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பி வேக வைக்கவும்.
  • ருசியான பேரீச்சம் பழம் கப் கேக் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here