‘கிங்’ கோலியை காப்பியடித்த பாகிஸ்தான் வீரர்…

0
53

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை போலவே போட்டோ வெளியிட்ட பாகிஸ்தான் வீரர் முஹமது ஹபீஸை பாகிஸ்தான் ரசிகர்களே மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபிஸ். இங்கிலாந்தில் சமீ பத்தில் முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது.

ஹபீஸ் நீக்கம்
இதன் விளைவாக ஹபீஸ் மத்திய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து மிக முக்கியமாக கருதப்படும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்.

தீவிரவாத தாக்குதலுக்கு பின்
கடைசியாக பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் செல்ல அஞ்சியது.

மீண்டும் கிரிக்கெட்…
இதையடுத்து பல வகையில் போராடி பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்த எடுக்கப்பட்ட முயற்சிக்கு ஒருவழியாக இலங்கை கிரிக்கெட் போர்டு ஒப்புக்கொண்டது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல முன்னணி வீரர்கள் இத்தொடரில் இருந்து விலகினர்.

மரண கலாய்
இதற்கிடையில் கரீபியத்தீவில் நடக்கும் சிபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால், செயிண்ட் கீட்ஸில் தற்போதுள்ள ஹபீஸ், சூரிய மறைவை போட்டோ எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய கேப்டன் விராட் கோலியை பார்த்து காப்பியடிக்க வேண்டாம் என கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here