செம ஹிட்டு கொடுத்த கோமாளி இயக்குநருக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு!

0
73

ஜெயம் ரவியின் கோமாளி படம் வெற்றி கொடுத்ததைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதானுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் வந்த எல்.கே.ஜி. படம் வெற்றி கொடுத்ததைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் வந்த கோமாளி படமும் வெற்றி கொடுத்தது. இந்த இரு படங்களையும், ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படி ஒரே ஆண்டில், இரு வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான கோமாளி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு காரணமான கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஐசரி கணேஷ் ஆடம்பரமான ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதற்கு முன்னதாக எல்.கே.ஜி படத்தின் இயக்குநர் பிரபுவுக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ஐசரி கணேஷ் இப்படியொரு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. படம் தொடங்கப்பட்டதிலிருந்து சிறப்பாக உருவாக தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். இந்தப் படத்தில் நான் ஒன்றை தவறவிட்டேன். அதாவது, 90களின் குழந்தைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பரிசு தருவேன் என்று சொல்லி பெற்றோர் ஊக்கம் கொடுப்பார்கள்.

இதை நான் படத்தில் காட்சிப்படுத்தத் தவறிவிட்டேன். ஆனால், இப்போது தேர்வு எழுதி வெற்றி பெற்ற எனக்கு தந்தையைப் போன்று ஐசரி கணேஷ் எனக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசு கொடுத்துள்ளார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here