ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை

0
63

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1/ கப்,
இட்லி அரிசி     – 1 கப்,
உளுந்து – 1/4 கப்,
பல்லாரி – 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

  • முதலில் அரிசி, உளுந்து, கடலைப்பருப்பை தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாக கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். பின் நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
  • சுவையான வாழைப்பூ அடை ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here