IND vs SA: இந்திய வீரர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட டிராவிட்!

0
43

பெங்களூரு : தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் நேரில் சந்தித்தார்.

ஹைலைட்ஸ்

  • தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் டி-20 போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் போட்டி கனமவை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றது.
இரு ஜாம்பவான்கள்…
இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி வரும் 22ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை இந்திய ஜாம்பவான் டிராவிட், நேரில் சந்தித்தார்.
தவிர, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சந்தித்த டிராவிட் போட்டோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது . அதில் , ‘இந்திய கிரிக்கெட்டின் இரு சிறந்த வீரர்கள் சந்தித்த போது’ என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here