மஷ்ரூம் பெப்பர் மசாலா

0
52

என்னென்ன தேவை?

மஷ்ரூம் – 1 பாக்கெட்,
வெங்காயம், தக்காளி – தலா 2,
மிளகு – 4 டீஸ்பூன்,
தனியா – 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 2 கப்,
கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 3 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

  • மஷ்ரூமை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். மிளகு, தனியா, தக்காளி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, மஷ்ரூம் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அரைத்த விழுது, 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here