பனீர் தேங்காய்ப்பால் கிரேவி

0
60

என்னென்ன தேவை?

நறுக்கிய பனீர் துண்டுகள் – 20,
வெண்ணெய் – 3 டீஸ்பூன்,
கஸ்தூரிமேத்தி – 1 டீஸ்பூன்,
சிகப்பு மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

அரைக்க…

முந்திரி – 10,
தேங்காய் துண்டு – 1,
வெங்காயம்,
தக்காளி – தலா 2,
பட்டை, ஏலக்காய் – தலா 1,
லவங்கம் – 2.

 

எப்படிச் செய்வது?

  • அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அரைத்த விழுது, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின்பு மிளகாய்த்தூள், உப்பு, கஸ்தூரிமேத்தி சேர்த்து கொதிக்கும் பொழுது பனீர், தேங்காய்ப்பால் கலந்து மேலும் ஒரு கொதி விட்டு இறக்கி சப்பாத்தி, பரோட்டா, தோசையுடன் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here