WhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்!

0
154

வாட்ஸ்ஆப்பில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவதால், இதையெல்லாம் கவனிக்க உங்களுக்கு நேரம் இருந்திருக்காது!

வாட்ஸ்ஆப்பை ஒரு “பிரபலமான” ஆப் என்று கூறும் அனைவருக்குமே, அதன் அத்தனை அம்சங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை, தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை. அது அவர்களுடைய தவறும் இல்லை.

அது வாத்தியார்களின் தவறு ஆகும், அதாவது வாட்ஸ்ஆப்பில் இப்படியெல்லாம் அம்சங்கள் உள்ளன, அதை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு சொல்லிக்கொடுக்காத ‘வாத்தியார்களின்’ தவறாகும்!

சில தருணங்களில் “இதுகூடவா தெரியாமல் இருக்கும்?” என்று எண்ணி, சில தலைப்புகளை பற்றி யாருமே பேசுவதில்லை. அப்படியான ஒரு எண்ணத்தின் கீழ் எந்தவொரு தலைப்பையும் சமயம் தமிழ் டிப்ஸ் & ட்ரிக்ஸ் பிரிவு விடுவதாய் இல்லை. 100 பேரில் 99 பேருக்கு தெரிந்த ஒரு விடயம். ஒரு நபருக்கு தெரியவில்லை என்றாலும் கூட அது தவறு தான், அந்த தவறை நாங்கள் செய்யவதாய் இல்லை.

அப்படியாக வாட்ஸ்ஆப் வழியாக அணுக கிடைக்கும் ஐந்து தந்திரங்களை இத்தொகுப்பில் பட்டியலிட்டு உள்ளோம். ஏற்கனேவே தெரிந்தவர்கள் “இன்னும்” நன்றாக அறிந்துகொள்ளுங்கள், தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்!

01. வீடியோக்களை GIF ஆக மாற்றலாம்!

வாட்ஸ்ஆப்பின் இன்-ஆப் கேமரா ஆனதுபுகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து நமது தொடர்புகளுக்கு அனுப்ப அனுமதிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் வாட்ஸ்ஆப்பில் ஒரு உள்ளமைக்கப்பட்ட GIF கருவி உள்ளதென்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

ஆமாம்! எந்தவொரு மூன்றாம் தரப்பு பயன்பாடும் இல்லாமல் நேரடியாக வாட்ஸ்ஆப்பில் GIF-களை உருவாக்கலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்த ஒரு வீடியோவைப் பதிவுசெய்து, மேல் வலது மூலையில் உள்ள GIF ஐகானை தேர்ந்தெடுக்கவும், அவ்வளவுதான்! உங்கள் GIF கிளிப்பின் கால அளவை கூட நீங்கள் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

02. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்டோரியாக வைக்கலாம்!

அனைவரும் அணுக கிடைக்காத இந்த அம்சம், சோதனை கட்டத்தை தாண்டி விட்டதால் கூடிய விரைவில் எல்லோருக்கும் உருட்டப்படலாம். சரி இதெப்படி வேலை செய்யும்? பேஸ்புக் நிறுவனமானது Multi-platform sharing-ஐ ஆதரிக்கிறது. அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பகிர அனுமதிக்கிறது.

பேஸ்புக் ஸ்டோரியாக உங்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பகிர்வது மிகவும் எளிதான ஒரு தந்திரமாகும். நீங்கள் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பதிவேற்றியதும், அதன் கிழேயே பேஸ்புக் ஸ்டோரியாக பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு விருப்பம் இருக்கும். அதை டேப் செய்யவும், உங்கள் புகைப்படம் அல்லது வீடியோ உங்கள் பேஸ்புக் ஸ்டோரியாக பதிவேற்றப்படும்.

03. ஸ்டார்டு மெசேஜஸ்!

நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் என பலராலும், பல செய்திகள் பகிரப்படுவதால், நமது வாட்ஸ்ஆப் ஆனது ஒரு மெசேஜ் பேங்க் போன்று ஆகி விடுகின்றது. சில நேரங்களில் அதில் முக்கியமானவற்றை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதொரு வேலையாகி விடுகிறது. அதிலிருந்து உங்களை காப்பாற்றும் ஒரு அம்சம் தான் – ஸ்டார்டு மெசேஜஸ்.

குறிப்பிட்ட மெசேஜை நீங்கள் ஸ்டார்டு ஆக மாற்றுவதின் வாயிலாக, அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மறுபடியும் அணுகலாம். அதாவது குறிப்பிட்ட சாட்டின் முக்கியமாக மெசேஜ்களை தனியாக சேமிக்கலாம் என்று அர்த்தம். ஒரு மெசேஜை நீங்கள் வெறுமனே லாங் பிரஸ் செய்ய, மேலே நட்சத்திர ஐகான் ஒன்று தோன்றும். அதை டேப் செய்யவும் அந்த மெசேஜ் ஆனது ‘ஸ்டார்டு மெசேஜஸ்’ டேப்பின் கீழ் சேமிக்கப்படும்.

04. ரீடர் ரெசிப்ட்களை ஆஃப் செய்யாமலேயே மெசேஜ்களை படிக்கலாம்!

சிலர் ப்ரைவஸி காரணத்திற்காக, தங்களது வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீன் மற்றும் ரீடர் ரெசிப்ட்களை ஹைட் செய்து வைத்திருப்பார்கள். இருப்பினும், பலர் அதை செய்ய விரும்பவில்லை. ஒருவேளை நீங்கள் ஹைட் செய்யவும் விரும்பவில்லை, அதே சமயம் அனுப்புநருக்கு தெரியப்படுத்தாமல் மெசேஜ்களை படிக்கவும் விரும்புகிறீர்கள் என்றால், வெறுமனே உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிளைட் மோட்-ஐ ஆன் செய்து விடவும். பின்னர் குறிப்பிட்ட மெசேஜை படிக்கவும், அவ்வளவுதான்!

05. வாட்ஸ்ஆப்பில் எழுத்துருவை மாற்றலாம்!

எழுத்து உருவங்களை மாற்றுவது என்பது நீங்கள் வாட்ஸ்அப்பில் பெறக்கூடிய மிகவும் ஆக்கபூர்வமான ஒரு அம்சம் ஆகும். அதாவது வாட்ஸ்ஆப் உங்களை போல்ட், இடாலிக்ஸ் உட்பட சில ஃபான்ட்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. சமீபத்தில் தமிழ் சமயம் இதை பற்றி தெளிவாக விவரித்து இருந்தது. அதை படிக்க இந்த இணைப்பை சொடுக்கவும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here